திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலுக்கு புதிய மரத்தெப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2014 01:04
திருப்பத்தூர் ; திருப்பத்தூர் குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருத்தளிநாதர் கோயில். வைகாசி விசாக விழா மிகவும் புகழ் பெற்றது. விழாவின் 10ஆம் திருவிழாவான தெப்பத் திருவிழா, மண்டகப்படியாக நடைபெறும். இவ்விழாவிற்காக ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய தெப்பம் வடிவமைக்கப்படுகிறது. இதையடுத்து கோயில் சாத்திரப்படி விநாயகருக்கு சதுரம், முருகனுக்கு அறுங்கோணம், ஈஸ்வரன் அம்மனுக்கு எண்கோணம், பெருமாளுக்கு 10 அம்சங்களுடன் தெப்பம் செய்யப்படும். அதன்படி இங்கு எண்கோண வடிவில் தெப்பம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.கோயிலுக்கு உகந்த முழுமையான வேங்கை மரத்தில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.