சேத்தியாத்தோப்பு: வீரமுடையாநத்தம் ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாத இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து வீரசக்தி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம், அன்னதானம் நடந்தது. வீரசக்தி ஆஞ்சநேயருக்கு துளசி மற்றும் வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பூஜைகளை பாலாஜி ஐயர் நடத்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.