மழை வேண்டி நெல்லையப்பர் கோயிலில் செய்த யாகத்திற்கு..கிடைத்தது பலன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2014 02:04
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழை வேண்டி இன்று யாகம் நடத்தப்பட்டது. திருநெல்வேலிக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பாபநாசம் அணையில் நீர்மட்டம் 35 அடியாக குறைந்துவிட்டது. மொத்தம் 143 அடி உயரம் கொண்ட அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. எனவே மழையில்லாமல் இதே நிலை தொடர்ந்தால், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும். எனவே அறநிலையத்துறையினர் மூலம் முக்கிய கோயில்களில் இன்று காலை 5.55 மணிக்கு வருண ஜெபம் நடத்தப்பட்டது. நெல்லையப்பர் கோயிலில் சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள பிரதோஷ நந்தியை சுற்றிலும் சுவர் எழுப்பி நந்தியின் கழுத்து அளவுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் 11 வேத விற்பன்னர்கள் மூலம் யாகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வறட்சியிலும் குற்றாலத்தில் மழைபெய்தது. பெய்த கோடைமழையால் மெயின் அருவியில் ஓரளவு தண்ணீர் விழுந்தது. இதனால் பக்தர்களும் சுற்றுலா பயனிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.