காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரமடத்தில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி மகோற்வ விழா தொடங்குகிறது. மகோற்சவத்தையொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேதபாராயணம், பாஷியபாராயணம், பஜனைகள் நடைபெற உள்ளன.மாலையில் சிறப்பு உபன்யாசங்கள் நடைபெற உள்ளன. ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி தினமான மே மாதம் 4-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆவஹந்தி ஹோமத்துடன் தொடங்குகிறது.காலை 9 மணி முதல் 10 மணிக்குள் விசேஷ அபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஆதிசங்கரர் வீதி உலா நடைபெற உள்ளது. மங்கள தீர்த்தம், 4 ராஜவீதி வழியாக ஊர்வலம் நடைபெறும்.