சிதம்பரம்,: கடலூர் மாவட்டம் .சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் தருமை ஆதீனம் சார்பில் சமயக்குரவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சமயாச்சாரியார்கள் மெய்கண்டார், அருந்திசிவம், மறைஞானசம்பந்தம், உமாபதிசிவம் ஆகிய8 பேருக்கு குருபூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் அப்பர் (திருநாவுக்கரசர்) பிறந்ததால், அப்பர் சதய விழா கடந்த வெள்ளிக்கிழமை நடராஜர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டப நடனப் பந்தலில் நாவுக்கரசர் வாழ்வும், வாக்கும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. .