ஆண்டிபட்டி : வைகை அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து , மதுரை குடிநீர் திட்டம் மற்றும் ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் விநியோகிக்க முடியும்.இந்நிலையில், வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வேண்டி மதுரை மாநகராட்சி ஆணையர் கதிரவன் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள் 15 பேர் கொண்ட குழுவினர் வைகை அணையின் கிழக்கு கரையில் நேற்று காலை மழைவேண்டி சிறப்பு யாகம் நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிவடைந்தது