விழுப்புரம்: வண்டிமேடு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் வண்டிமேடு, தேவி நகரிலுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் , சித்திரை அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதில் அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.