சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தில் அன்னக்கொடி நிகழ்ச்சி நடந்தது.சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமைவாய்ந்த திரிபுவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் தொடர்ந்து 900 ஆண்டுகளாக மாறாமல் குரால் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திரிபுவனேஸ்வரர் கோவிலில் நேற்று அன்னக்கொடியை நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சாமி ஊர்வலம் நடந்தது. திருதொண்ட நாயனார் புராணம் பாடல் பாடப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு நாடகம் நடந்தது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.