சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அள்ளூர் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 10 தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.10 தினங்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மும் சிறப்பு அர்ச்சனையும் காத்தவராயன் கதைப்பாட்டு நிகழச்சியும் நடந்தது.நேற்று முன் தினம் பால் குட ஊர்வலமும் நேற்று காலை காத்தவராயன் கழுமரம் ஏறுதல் உற்சவமும் நடந்தது.மாலை 4 மணிக்கு தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும் தொடர்ந்து வெள்ளாற்றில் சக்தி திரட்டலும்நடந்தது . மாலை 6.30 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் மகாதீபாராதனையும் மாவிளக்கு வழிபாடும் நடந்தது.விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஊர்க் காவல் படைதளபதி தில்லை சேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்.மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.