பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
11:04
ஊத்துக்கோட்டை : திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, பெரம்பூர் பாஞ்சாலி நகர் பகுதியில் உள்ளது திரவுபதி அம்மன் கோவில். ஒவ்வொரு ஆண்டும், இந்த மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த, 18ம் தேதி காப்புக் கட்டி, கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், அர்ச்சுனன் தபசு, திருக்கல்யாணம், நச்சுக்குழி யாகம், மாடுபிடி சண்டை, படுகளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழா முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த, 108 ஆண்கள், சிறுவர்கள் காப்புக் கட்டி, உடலின் சந்தனம் பூசி, பக்தி பெருக்குடன் தீமிதித்தனர். இதில் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.