பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
11:04
ராமேஸ்வரம் : மழை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நந்தி சிலையை சுற்றி தண்ணீர் நிரப்பி வருண ஜெபம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள, நந்தி சிலையை சுற்றி அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி, கோயில் குருக்கள் ஸ்ரீ ராம் தலைமையில் வேத விற்பன்னர்கள் வருண ஜெப பூஜை, மஹா தீபாராதனை நடத்தினர். பின், சுவாமி சன்னதியில் ருத்ரா அபிஷேகம் பூஜை நடந்தது. இதில், கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் பங்கேற்றனர்.கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில், சிவச்சாரியார் தேவேந்திர குருக்கள் தலைமையில் நந்தி பகவான் சன்னதி முன் மழை வேண்டி சிறப்பு வருணஜெபம் நடந்தது.உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வருணஜெபம் நடத்தப்பட்டு,108 குடத்தில் வாசனை திரவியங்கள் கலந்து அபிஷேகமும் அதனை தொடர்ந்து கும்பத்தினால் நந்திபகவானுக்கு மகாபிஷேகம் நடந்தது. கோயிலில் உள்ள அக்னி தீர்த்த கரையில் வருண கும்ப தீர்த்தவாரி நடந்தது. திவான் மகேந்திரன், அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் பங்கேற்றனர்.