பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் விழாவை முன்னிட்டு, பக்தர்கள் விரதம் துவக்கினர். தமிழக - கேரள எல்லை யில் அமைந்துள்ளது, மங்கலதேவி கண்ணகி கோயில். சித்ராபவுர்ணமி தினமான மே 14ல், வரலாற்று சிறப்புமிக்க, இக்கோயிலில் ஒரு நாள் மட்டுமே, விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக,நேற்று காலை 11 மணிக்கு, கோயில் அமைந்துள்ள, மலை அடிவாரப் பகுதியான பளியன்குடியில், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில், கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காப்பு கட்டியும் மாலை அணிந்தும் விரதம் துவங்கினர். முன்னதாக, பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது. கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜ்கணேசன், பொருளாளர் முருகன், வனத்துறையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.