மதுரை சித்திரை விழா: அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2014 10:05
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் 2-ம் நாளில் அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவின் 2-ம் நாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பிரியாவிடை வாகனத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு அம்மனையும், சுவாமியையும் தரிசித்தனர்.