கடலூர்: கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள கரையேறவிட்ட நகரில் அப்பர் என்கிற திருநாவுக்கரசர் மோட்சம் அடைந்த நாஞூ ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் குரு பூஜை விழா நடப்பது வழக்கம்: அதன்படி இந்தாண்டு விழா நடந்தது.இதனையொட்டி காலை மங்கள இசை , கோ பூஜை, கணபதி ஹோமம், மகா தீபாராதனை, அப்பர் அடிகளார் வீதியுலாவும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாவடுதுறை ஆதீனம் மெய்கண்டார் கோயில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.