நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் பவனி விழா நடந்தது. இவ்வாலயத்தில் மே தினத்தை முன்னிட்டு உழைப்பாளர்களின் பாதுகாவலரான சூசையப்பர் திருவிழா நடந்தது. சிறப்பு பிரார்த்தனையை பங்கு தந்தை அலெக்ஸ் செய்தார். அவரது தலைமையில் சூசையப்பர் ஆரோக்கிய மாதா, அற்புத குழந்தை ஏசு, புனித மிக்கேல் அதிதூதர் ஆகியோர் நான்கு தேர்களில் தனித்தனியாக எழுந்தருளி பவனி வந்தனர். இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர்.