நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைவரவருக்கு தனி சன்னதி உள்ளது. அட்சய திரிதியை முன்னிட்டு மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.தொடர்ந்து பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திராளனோர் பங்கேற்றனர். பூஜை செய்யப்பட்ட நாணயங்கள் வழங்கப்பட்டது.