ஜூன் இறுதியில் சோலைமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 10:05
அழகர்கோவில் : மதுரை சோலைமலை முருகன் கோயில் திருப்பணிகள் உபயதாரர்கள் மூலம் ரூ.5 கோடியில் நடந்து வருகிறது. ஜூன் இறுதியில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அழகர்கோவில் மலை மீது உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால், தற்போது தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கோயில் எதிரில் வாகனங்கள் நிறுத்துமிடம், இடது பக்கம் சஷ்டி மண்டபம் அமைத்தல், வலதுபுறம் பக்தர்கள் ஓய்வு மண்டபம் அமைத்தல் உட்பட ரூ. 3 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நிர்வாக அதிகாரி வரதராஜன் கூறியதாவது: தற்போது கருங்கல் கருவறை அமைக்கும் பணி, தூண்கள் புதுப்பிப்பு, கோயிலை சுற்றி அறுபடை வீடுகள் அமைப்பில் சிலைகள் அமைத்தல், சுவாமி வாகனங்கள் புதுப்பித்து, பக்தர்கள் பார்க்கும் வகையில் கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. தவிர, ரூ. ஒரு கோடி மதிப்பில் சஷ்டி மண்டபம் அமைக்கும் பணியும் நடக்கிறது. நிர்ணயிக்கப்பட்டதை விட கும்பாபிஷேகப் பணிகளுக்கு கூடுதல் செலவாவதால், பக்தர்கள் பொருளுதவி செய்யலாம், என்றார்.