திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப்பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 10:05
காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றம் திருபுரசுந்தரியம்மை சமேத வேதகிரீஸ்வரர் கோயிலில் மே 2ம்தேதி முதல் சித்திரைப்பெருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில் 2ம் தேதி விக்னேஸ்வரர் உற்சவமும், 3ம் தேதி பல்லக்கு புண்ணியகோடி விமானம் பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெற்றது. நேற்று காலை மற்றும் இரவில் பவழக்கால் சப்பரம், பூதவாகனம் உலா நடைபெற்றது.
விழாவின் நிகழ்ச்சி விவரம்:
05-05-2014 திங்கள் அதிகாலை வெள்ளி அதிகாரநந்தி கிரி பிரதக்ஷணம், 63 நாயன்மார்கள் கிரிபிரதக்ஷணம் பிரபல உற்சவம், இரவு சந்திர பிரபை உற்சவம் 06-05-2014 செவ்வாய் காலை, இரவு புருஷா மிருகம் நாகவாகனம் 07-05-2014 புதன் காலை, இரவு கதலிவிருட்சம் வெள்ளி ரிஷப வாகனம்- மயில்வாகனம் 08-05-2014 வியாழன் காலை, இரவு விமானம் யானை வாகனம் 09-05-2014 வெள்ளி காலை பஞ்சரத உற்சவம் காலை 6-00 மணிக்குமேல் மாலை 6-30 மணிக்குள் மேஷ லக்கினத்தில் ரதா ரோஹணம், இரவு தந்தத்தொட்டி 10-05-2014 சனி காலை, இரவு தந்தத்தொட்டி குதிரரை வாகனம் 11-05-2014 ஞாயிறு காலை, மாலை, தந்தத்தொட்டி பிக்ஷõடனர் அலங்கார விமானம் இரவு 12-05-2014 திங்கள் காலை சபாநாயகர் சூரிய பிரபை பகல் 1-30 மணிக்கு ரிஷப தீர்த்தம் தீர்த்தவாரி பகல் பஞ்சமூர்த்திகள் தொட்டி உற்சவம் சங்குதீர்த்த தீர்த்தவாரி இரவு இராவணேஸ்வர வாகனம் கிரி பிரதக்ஷணம் துவஜா அவரோஹணம் 13-05-2014 செவ்வாய் காலை, இரவு பஞ்சமூர்த்திகள் உச்சிகால மகாபிஷேகம் நூதன விமானம், பந்தம்பறி உற்சவம்