திரிபுராந்தகர் கோவிலில் சித்திரை பெருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2014 12:05
பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோயில் சித்திரை பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி அம்பாளுடன் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் பவழக்கால் சப்பரத்திலும், இரவு பூத வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் துவங்கிய சித்திரை பெருவிழா வரும் 9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.