பதிவு செய்த நாள்
05
மே
2014
02:05
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில், சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவை முன்னிட்டு, கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.கோயிலில் இருந்து, வாசாந்தி எடுத்து வரப்பட்டது. கரத்தாழ்வார் கொடிப்பட்டம், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.மேள, தாளம் முழங்க கொடியேற்றப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. இன்று முதல் தினமும் இரவு 8 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம் எடுத்து வரப்படும்.மே 10ல், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். விழாவின் ஒன்பதாவது நாளான மே 12ல், சுவாமி திருத்தேரில் எழுந்தருள்வார்.மே 13, 14 தேதிகளில், தேரோட்டம் நடைபெறும். விழாவின், இறுதி நாளில் சப்தாவர்ண நிகழ்வில், சுவாமிகள் பூப்பல்லக்கில் பவனி வந்து, அருள் பாலிப்பர். விழா நாட்களில், தினமும் கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.