விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த எஸ். குச்சிப்பாளையத்தில் ஸ்ரீமந்தி அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் பாப்பனப்பட்டு மதுரா எஸ். குச்சிப்பாளையத்தில் பூரணி , புஷ்கலா சமேத ஸ்ரீமந்தி அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை யொட்டி நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணப திஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டுகாலயாக சாலை பூஜைகள் முடிவடைந்து, நேற்று காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20வது பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், புனித நீரை அய்யனாரப்பன் சிலைக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார் . யாக சாலை பூஜைகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் முன்னின்று செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சந்திரன், ஸ்தபதி சுப்பிரமணியன், முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.