பதிவு செய்த நாள்
07
மே
2014
03:05
மானாமதுரை : மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் சித்திரை, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறும். வரும் 10ஆம் தேதி இக் கோயிலில் சித்திரைத் திருவிழா துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 14- ம் தேதி விழாவின்அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. சுந்தரராஜப் பெருமாளை இஷ்ட தெய்வமாக வணங்கும் மானாமதுரையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் பெருமாளுக்கு மார்பு, தொடை, சங்கு அஸ்தம், சக்கரம், அபய ஹஸ்தம், ஊரு ஹஸ்தம், இரு கர்ண பத்திரங்கள், திருவடி, கிரீடம் ஆகியவை 7.5 கிலோவிலும், ஸ்ரீ தேவி பூ தேவிக்கு இரு கிரீடங்கள், நான்கு கர்ணபத்திரங்கள் 1.2 கிலோவிலும்
வடிவமைக்கப்பட்டுள்ள கவசத்தினை வழங்கினர்.