பொன்னமராவதி: பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூத்திருவிழாவில் கடந்த 5-ம் தேதி பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு செலுத்தி வழிபட்டனர். இக்கோயில் பூத்திருவிழா 2-ம் தேதி துவங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியில் பல்வேறு வீதிகளை சார்ந்த மக்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.