திருவாடானை : ராமநாõதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா நம்புதாளை கருப்பண சுவாமி கோயில் சித்ரா பெüர்ணமி திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவு சிறப்பு பூஜையும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான சித்ராபெளர்ணமி அன்று பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கி நேர்ச்சை செலுத்துவார்கள்.