ஒசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் அலகு குத்தும் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தினர். இக்கோயில் விழாவையொட்டி ஏரளாமான பக்தர்கள் அலகுகளை குத்திக் கொண்டு முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.