திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு , இறையமங்கலம் இளைய பெருமாள் என்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் சித்திரைத் தேர்த் திருவிழா ÷;ற்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது. நாளை மே 8) உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று காலை பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருள்வார். இரவு ஸ்ரீ ஹனுமந்த வாகனத்தில் கிரிவலம் வரும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை (மே 9) கருட வாகனத்தில்கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறும். மே 10- ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.