பதிவு செய்த நாள்
08
மே
2014
12:05
திருவள்ளூர் : சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வீரராகவ பெருமாள், சேஷ வாகனத்தில், எழுந்தருளினார். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 4ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. தினமும் காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் புறப்பாடும், கோவில் வளாகத்தில் பத்தி உலாவும் நடக்கிறது. விழாவின் 4வது நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு, உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி உடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, திரு வீதி உலா வந்தார்.