சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் உண்டியல் எண்ணும் பணி கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, கோயில் செயல் அலுவலர் தனபாலன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. ரூ.31,140494 காணிக்கையாக கிடைத்தது. மேலும் தங்கம், ,வெள்ளி ஆகியவை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.