வானமாதேவி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2014 10:05
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று தீ மிதி திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை 10:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நடந்தது. இரவு 9:00 மணிக்கு கோலவிழி அம்மனுக்கு காப்பு கட்டுதலும், 10:00 மணிக்கு திரவுபதி அம்மன் கோவிலில் கொடியேற்றமும் நடந்தது. அன்று முதல் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று (9ம் தேதி) காலை 10:00 மணிக்கு அர்சுனன் மாடு விரட்டுதலும், 11:00 மணிக்கு அரவான் கடபலியும், 11:30 மணிக்கு திரவுபதி அம்மன் கூந்தல் முடிதலும் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு அலகு சாத்துதல் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.