கோடை விடுமுறை துவங்கி விட்டது. அத்தோடு, நம்ம ஊர் கோவில் திருவிழாக்களும் நடக்கின்றன.திருவிழாவில் நடக்கும் ஒவ்வொரு வழிபாட்டுக்கும், ஒரு அர்த்தம் உண்டு. இதை நமக்கு அடுத்து வரும் தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களா... சேரன் மாநகர், பீளமேட்டிலுள்ள, செல்வவிநாயகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அனைவரும் வாருங்கள்... நாளைய பொழுது, தெய்வீக தாலாட்டில் லயிக்கட்டும்.