பொள்ளாச்சி : பொள்ளாச்சி விண்ணளந்த காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா துவங்கியது. வரும் 15ம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது. சுத்த புண்ணியாகவாசனம், கணபதி ேஹாமம், நோன்பு சாட்டுதல், கொடியேற்றுதலுடன் விழா தொடங்கியது. வரும் 13ம் தேதி கணபதி ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜை, தீர்த்தம் எடுத்தல் மற்றும் கும்ப ஸ்தாபனம் நடக்கும். தொடர்ந்து 14ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணிக்குள் அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். நிறைவாக 15ம் தேதி மகா அபிேஷகம் மற்றும் 18ம் தேதி வனதேவதை வழிபாட்டுடன் விழா நிறைவடையும்.