பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2014 12:05
இடைப்பாடி: இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஸ்வாமியின் திருக்கல்யாணம், நேற்று நடந்தது. பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் ஸ்வாமிக்கும், தேவகிரி அம்மனுக்கும், திருக்கல்யாணம் நடந்தது. ஸ்வாமி திருக்கல்யாணத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். சித்திரை தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று முதல் வியாழக்கிழமை வரை நடக்கிறது.