நாகர்கோவில் : மண்டைக்காடு ஆதிசங்கரதர்ம சாலை மற்றும் கொத்தனார்விளை சிவனடியார் பெருமக்கள் சார்பில் இன்று கொத்தனார்விளை மிடால முத்து சிவன் கோயிலில் 1008 லிங்க பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இருந்து 1008 லிங்கங்களை 7 பெட்டிகளில் வைத்து பக்தர்கள் சுமந்துகொண்டு ஊர்வலமாக கொத்தனார்விளை மிடாலமுத்து சிவன் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நீர்மலாயபூஜை, கணபதிஹோமம், கலச பூஜை, 1008 லிங்க பூஜை, மகாதீபாராதனை. அகிலபாரத ஆதிசங்கர சேவா பஜனை ஆகியவை நடைபெற்றன. பின்னர் மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7 மணிக்கு சுவாமி புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல் ஆகியன நடைபெற்றன.