உடுமலை : வனதுர்க்கை அம்மன் கோவில் பத்தாம் ஆண்டு திருவிழா நடந்தது. உடுமலை, தளி அருகே திருமூர்த்தி நகரில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இக்கோவில் பத்தாம் ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 29ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி, காளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டுவந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. சாம்பல் மேடு பகுதியில், சக்தி கும்பம், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 7 ம் தேதி, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கடந்த 8 ம்தேதி அம்மன் வீதியுலாவும், 9 ம்தேதி அம்மனுக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனையுடன் திருவிழா நிறைவடைந்தது.