சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எஸ்.செவல்பட்டியில், குரும்பஅய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார் குமரேசன் தலைமையில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள், பூரணாகுதி நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:45 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.