சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி ஜெயந்தி விழா, அன்னையர் தின விழா நடந்தது. விழாவையொட்டி யானையுடன் பால்குடம் ஊர்வலம் அம்மன் கோவிலை வந்தடைந்தது. முன்னதாக நேற்று காலை யானை முன் செல்ல பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு 17 வகையான அபிஷேகம், சங்காபிஷேகம், மா விளக்கு பூஜையும் நடந்தது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்து மகாதீபாரதனையை கணேஷ்சர்மா செய்து வைத்தார். அன்னையர் தினத்தை முன்னிட்டு வாசவி கிளப் வனிதா மற்றும் வாசவி இண்டர்நேஷனல் சார்பில் அன்னையருக்கு பாதபூஜைகள் 70க்கும் மேற்பட்டோர் செய்து நினைவுப்பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஆர்ய வைசிய இளைஞர் சங்கம், மகிளா விபாக், வாசவி கிளப், வனிதா கிளப், நிர்வாக கமிட்டியினரும் இணைந்து செய்தனர்.