பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
விடாமுயற்சியுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் 11ல் இருக்கும் புதன், சூரியன் நற்பலன் வழங்குவர். சுக்கிரன் மே 24 வரை ராசிக்கு 9ல் இருந்து நன்மை கொடுப்பார். செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைவதால் முழுமையான பலன் தருவார். குரு 12ல் சஞ்சரிப்பதால் நன்மை ஏதும் தர மாட்டார். ஜூன் 13ல் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் பார்வை பலன் சிறப்பாக உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றிக்கு வழி வகுப்பார். ராசிக்கு 4-ல் இருக்கும் சனி,ராகு,10-ல் உள்ள கேது, ஆகியோரால் நன்மை இல்லாவிட்டாலும், சனியின் 3-ம் பார்வையால் நன்மை கிடைக்கும். செவ்வாயால் வாழ்வில் வளர்ச்சி உண்டாகும். சூரியன்,புதனால் பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் அமோக லாபம்உண்டாகும். எடுத்த காரியம் வெற்றி அடையும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும். மே 24க்குப் பிறகு எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் ஏற்படலாம் கவனம். பணியாளர்களுக்கு நன்மையான காலகட்டம். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை பெறுவர். அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும். கலைஞர்களுக்கு சாதகமான நேரம் இது. ஆனால் மே24 க்குப் பிறகு சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலன் பெறுவர். எதிர்பார்த்த புகழ் உண்டாகும். மாணவர்களுக்கு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி உண்டாகும். விவசாயிகள் பயறு வகைகள், பசுவளர்ப்பின் மூலம் வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரம் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. பெண்கள் அக்கம் பக்கத்தினரின் அன்பை பெறுவர்.
நல்ல நாள்: மே 17,18,19,20,26,27,28,29, ஜூன் 2,3,7,8,14
கவன நாள்: மே 21,22,23 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7,9 நிறம்: செந்தூரம், பச்சை
பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.