பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
பணியில் திறமை மிக்க சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் 3-ல் இருக்கும் சனி,ராகு,10ல் இருக்கும் சூரியன், புதன் முன்னேற்றத்தை வழங்குவர். மே 24ல் சுக்கிரன் மீனத்தில் இருந்து மேஷத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். ஆனால் செவ்வாய் ,கேது ஆகியோரால் நன்மை பெற முடியாது. அதே நேரம் 11ல் இருக்கும் குருவால், புதிய பதவியும், சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் திருப்தி காண்பீர்கள். ஜூன் 13 ல் ராசிக்கு 12-ம் இடமான கடகத்திற்கு குரு அடியெடுத்து வைக்கிறார். அதன் பின் அலைச்சலும், பொருள் விரயமும் ஏற்படும். சூரியனால் எடுத்த காரியம் சிறப்பாக முடியும். சமூகத்தில் மதிப்பு உயரும். செவ்வாய் 2ல் இருப்பதால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவரால் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலம் கிடைக்காது. வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நோய்நொடி மறைந்து ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். புதன் சாதகமாக இருப்பதால் பெண்களால் நன்மை கிடைக்கும்.
தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் மேம்படும். எடுத்த செயலை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினர் மத்தியில் நல்ல பெயர் உண்டாகும். விரும்பிய கோரிக்கை நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று சிறப்பு நிலை அடைவர். அரசியல்வாதிகள் முயற்சிக்கு தக்க பலன் பெறுவர். உங்கள் கவுரவத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாது. மாணவர்கள் புதனின் நிலையால் சிறப்பான நிலை அடைவர். மேல்படிப்பில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர். விவசாயிகள் நல்ல விளைச்சல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு கைநழுவி போகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருட்கள் கிடைக்கப் பெறலாம்.
நல்ல நாள்: மே 19,20,21,22,23,28,29,30,31, ஜூன் 1,4,5,6,9,10
கவன நாள்: மே 24,25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 2,4,8 நிறம்: பச்சை,வெள்ளை
பரிகாரம்: தினமும் காலையில் விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். முருகன், துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஆதரவற்ற மூதாட்டிக்கு இயன்ற உதவியைச் செய்வதும் நல்லது.