பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
சாதனை புரிவதில் விருப்பமுள்ள விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவும், 11-ம் இடத்தில் இருக்கும் செவ்வாயும் சிறப்பான பலனைத் தருவர். சுக்கிரன் தற்போது நற்பலனைக் கொடுத்தாலும் மே 24க்குப் பிறகு மேஷத்திற்கு வந்து திருப்தியற்ற பலனைத் தரலாம். சூரியன், புதனால் எந்த பலனும் கிடைக்காது. அதே போல் 11-ம் இடத்தில் உள்ள சனி,ராகு ஆகியோரும் நற்பலனைக் கொடுக்க மாட்டார்கள். குரு 8ம் இடத்தில் உள்ளார். இது சிறப்பான நிலை அல்ல. ஜூன் 13ல், 9-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். திருமணம் நடத்த வாய்ப்பு உண்டு.சுக்கிரனால் குடும்ப பெரியோர் வகையில் அனுகூலமான போக்கு இருக்கும் அவர்கள் உதவிகரமாக இருப்பர்.வீட்டில் பிரச்னைகள் நிகழலாம்.கணவன் மனைவிஇடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். இதற்கு காரணம் புதன் 7-ம் இடத்தில் இருப்பதே.ஆனால், கேதுவால் காரிய அனுகூலம் ஏற்படும். பொருளாதார வளம் அதிகரிக்கும்.
பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வேலையில் கவனமுடன் இருக்கவும். வியாபாரம், தொழிலில் லாபம் குறையாது. வெளியூர் பயணம் ஏற்படும். கலைஞர்களுக்கு விருது பாராட்டு கிடைக்க பெறலாம். மே 24க்குப் பிறகு மனதில் சோர்வு ஏற்படும். அதிக முயற்சி எடுத்தே வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு, பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. மாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். இந்த மாதம் புதன் மே22-ந் தேதி வக்கிரத்தில் சிக்குவதால் உங்கள் முயற்சிக்குத் தக்க பலன்கள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: மே15,16,19,20,26,27,28,29 ஜூன்4,5,6,7,8, 11,12,13.
கவன நாள்: மே 30,31, ஜூன்1.
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: சிவப்பு, வெள்ளை
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு பயன் உள்ளதாக அமையும். புதன்கிழமை குலதெய்வத்தை வணங்கி பாசிப்பயறு தானம் செய்யுங்கள். இதனால் குடும்பத்தில் பிரச்னை மறைந்து ஒற்றுமை ஏற்படும்.