பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
உதவும் மனம் படைத்த தனுசு ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன்,புதன் 6-ம் இடத்தில் நின்று நற்பலனை கொடுப்பார்கள். சுக்கிரன் மே 24ல் மீனத்தில் இருந்து 5-ம் இடமான மேஷத்திற்கு சென்றாலும் மாதம் முழுவதும் சிறப்பான பலனை தருவார். 11-ல் இணைந்திருக்கும் சனி,ராகு நன்மை தருவார்கள். 5-ல் உள்ள கேது, 10-ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் ஆகியோரால் பலன் பெறமுடியாது. குரு 7-ம் இடமான மிதுனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகிஇருக்கும். ஜூன் 13-ந் தேதி 8-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. வீண் விரோதத்தை உருவாக்குவார். இருப்பினும் அவரது 7-ம் இடத்து பார்வையால் நன்மை உண்டு. மாதமுற்பகுதியில் அதிக பணப்புழக்கம் இருக்கும். எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். சிலர் உல்லாச பயணம் மேற்கொள்வர். புதன் 6-ம் இடத்தில் இருப்பதால் எடுத்த செயல் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். மே 24க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.
பணியாளர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாறலாம். வியாபாரிகளுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். தொழிலில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெறலாம். மாணவர்கள்- மிகவும் சிறப்பான நிலையை அடைவர். விவசாயிகள்- உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். பெண்களுக்கு ஆடம்பர பொருள் வாங்க யோகமுண்டு.
நல்ல நாள்: மே17,18,19,21,22,23,28,29,30,31 ஜூன் 1,7, 8,9,10,14.
கவன நாள்: ஜூன்2,3
அதிர்ஷ்ட எண்: 3,5,7 நிறம்: பச்சை, செந்தூரம்
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். இதனால் உடல் உபாதை குறைந்து நலம் பெறுவீர்கள். ராமரை வழிபட்டால் வசதிகள் கிடைக்கும்.