பதிவு செய்த நாள்
13
மே
2014
09:05
எந்த சூழலையும் சமாளிக்கும் திறமையுள்ள துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 8ல் உள்ள புதனும், 9ம் இடத்திலுள்ள குருவும் பல்வேறு நன்மைகளை செய்து கொண்டுள்ளனர். ஜூன் 13ல், குரு 9-ம் இடமான மிதுனத்தில் இருந்து விலகி 10ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சுமாரான நிலை. அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம். குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன்மூலம் எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுக்கிரன் மே 24ல் இருந்து 7-ம் இடமான மேஷத்திற்கு செல்வதும் பாதகமான நிலையே. பெண்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை அளிக்கும். புதன் 8-ல் இருப்பதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். இருப்பினும் மனதில் சோர்வு ஏற்படும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
தொழில் பிரச்னை இருந்தாலும், குடும்பப் பிரச்னையாவது தீர்ந்ததே என்ற நிம்மதி ஏற்படும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு, வேலையின் ஒவ்வொரு பகுதியையும் கவனமாகச் செய்ய வேண்டும். வியாபாரம், தொழிலில் லாபம் குறையாது. அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிக முயற்சி எடுத்தால் தான் பதவி கிடைக்கும். மாணவர்கள் சிலர் படிக்க வெளிநாடு செல்வர். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். விவசாயிகள் சிறந்த மகசூல் பெறுவர். கால்நடைகளால் செல்வம் பெருகும்.
பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும்.புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். உடல் நலம் சுமாராக இருக்கும்.
நல்ல நாள்: மே 17,18,24,25,26,27, ஜூன்2,3,4,5,6,9,10,14
கவன நாள்: மே 28,29.
அதிர்ஷ்ட எண்:4,7 நிறம்: மஞ்சள், பச்சை
பரிகாரம்: ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். கிருஷ்ணரை வழிபடுங்கள். தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம்.