காரைக்கால் தங்க மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2014 11:05
காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்க மாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் இரவு அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடந்தது. பகல் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் சிலர் குழந்தைகளுடனும், காவடியுடன் தீக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.விழாவில் திருமுருகன் எம்.எல்.ஏ., முன்னால் எம்.எல்.ஏ.,ஒமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தனர்.