அரோகரா கோஷத்துடன.. எட்டுக்குடி முருகன் கோவில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2014 11:05
நாகப்பட்டினம்: நாகை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானதோடு, அருணகிரி நாதரால் பாடல் பெற்றது.இக்கோவிலில் முருகப் பெருமான் ஆறு முகங்களுடன்,12 கைகளுடன் காட்சியளிக்கிறார். சிவபெருமானை, பார்வதி தேவியார் வழிபட்டு சிவபெருமானை விட்டு பிரியாமல் இருக்க கேதார கௌரி விரதமிருந்து மாதொரு பாகனாய் ஆனதாகவும்,வன்மிக முனிவர் கோவிலில் குடி கொண்டுள்ள ஆனந்த வள்ளியை வழிபட்டு முக்தி அடைந்ததாகவும் இக்கோவிலின் வரலாறு. குழந்தைகளின் பயம் நீங்கவும்,திருமணத்தடை,குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும் பரிகார தலமான இக் கோவிலில், சித்திரை திருவிழா,கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.இதையொட்டி முருகப்பெருமான் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.