விழுப்புரம்: பாணாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத விழா நடந்தது. விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்திரை மாத சிறப்பு விழா நடந்தது. நேற்று முன் தினம் காலை ரேணுகா அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் சாகை வார்த்தல் விழா நடந்தது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். இரவு ரேணுகா பரமேஸ்வரி அம்மன், முத்தால வாழியம்மன் வீதியுலா வந்தது.