சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்டை மேளம் முழங்க அம்மன் வீதியுலா நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தத்தில் உள்ள பழைமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து ஆயிரத்தெட்டு நாமவளி அர்ச்சனையும் உடன் மாவிளக்கு பூஜையும் நடந்தது. திரளான பெண்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சென்டை மேள வாத்தியம் முழங்க வீதியுலா காட்சி நடந்தது. பூஜைகளை பாலாஜி ஐயர் நடத்தினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சிட்டிபாபு தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். ஓடாக்கநல்லூர் : கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜையும் அம்மன் வீதியுலாவும் நடந்தது. சேத்தியாத்தோப்பு கிளாங்காடு காளியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இரவு காளிம்மன் கரகம் வீதியுலா நடந்தது.