காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயிலில் சித்ரா பவுர்ணமியான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி திதியன்று சித்ரகுப்தன் பிறந்தார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பெüர்ணமியன்று இக்கோயிலில் சித்ரகுப்தன் பூஜை நடைபெறும். இந்த ஆண்டு அப்பூஜை நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சித்ரகுப்தனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதணைகள் நடைபெற்றன. பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.