பதிவு செய்த நாள்
16
மே
2014
09:05
புதுச்சேரி: பல்வேறு அமைப்புகள் சார்பில், புத்த பூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று, புத்தர் ஞானம் பெற்றார். இந்த தினம், புத்த பூர்ணிமா விழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பீம்சேனா, மகாபோதி சங்கம், அம்பேத்கர் பேரவை, புதுச்சேரி கிராம முன்னேற்ற சங்கம், குடியரசு கட்சி, தலித் மக்கள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை சார்பில், புத்த பூர்ணிமா விழா, வெங்கட்டா நகரில் உள்ள மகாபோதி சங்கத்தில் நடந்தது. விழாவில், மெழுகுவர்த்தி ஏற்றி, புத்தரின் சிலைக்கு மலர் துாவி, புத்த வந்தனம், திரிசரணம், பஞ்சசீலம் கூறி, புத்தரை வணங்கினர். விழாவுக்கு, முன்னாள் எம்.பி., வி.பி.எம்.சாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி முன்னிலை வகித்தார். திருமால், ரத்தினவேலு, தமிழ்மணி, அங்காளன், கிருஷ்ணன், இந்திராமுனுசாமி, பிரதாப், ராஜாராமன், அரசம்மாள், ஜோஸ்பின் ஆகியோர் பேசினர்.