சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் தசாவதாரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2014 12:05
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் அழகரின் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயில் அரங்கில் தசாவதாரம் நிகழ்ச்சி துவங்கியது. கோயில் பட்டர் ரகுராமர் வேதங்கள் முழங்க அழகருக்கு பரிவட்டம் கட்டி, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி செய்தனர்.