கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் கூழ் வார்க்கும் விழா நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்புபூஜை செய்து காப்பு கட்டப்பட்டது. 10 மணிக்கு பூங்கரக ஊர்வலம் நடந்தது. மாலை 3.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் கூழ்வார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் முன்பு வைக்கப் பட்டிருந்த பெரிய கொப்ப ரைகளில் பொதுமக்கள் கூழ் வார்த்தனர். பின்னர் பக்தர் களுக்கு கூழ் வழங்கப்பட்டது.