விழுப்புரம்; விழுப்புரம் முகையூரில் மகிமை மாதா கோவிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டு 10-ம் திருவிழா தேர்பவனி முக்கியமான நிகழ்ச்சியாகும். இந்த ஆண் டிற்கான திருவிழா கடந்த 8-ம் தேதி தொடங் கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாதாவிற்கு திருப் பலிகள் நடைபெற்றன. நேற்று முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.